வித்யாரம்பம் நிகழ்ச்சி
மதுரை: விஜயதசமியை முன்னிட்டு ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சிம்மக்கல் சாரதா சமிதியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. மதுரை ராமகிருஷ்ண மடம் சுவாமி தயாசாகரானந்தா ஆசி வழங்கினார். சிறப்பு யாகம் நடந்தது. பெற்றோர்கள் குழந்தைகளை அரிசியில் ‘அ’ என்றும், ‘ஓம்’ என்றும் எழுத வைத்து கல்வியை துவங்கி வைத்தனர் . மாநில அமைப்புச் செயலாளர் கிருஷ்ணராஜ் , பொருளாளர் ஆதிசேஷன் பங்கேற்றனர். மாவட்ட பொதுச் செயலாளர் குமார், துணைத் தலைவர் வாசுதேவன், பொருளாளர் கோபால், செயலாளர் செல்வி ஏற்பாடு செய்தனர்.