உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கிராம உதவியாளர்கள் உண்ணாவிரதம்

கிராம உதவியாளர்கள் உண்ணாவிரதம்

மதுரை |: காலமுறை சம்பளம், மாற்றுத்திறனாளி கிராம உதவியாளர்களுக்கு ஊர்தி பயணப்படி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் கிராம உதவியாளர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். மாவட்ட தலைவர் சாக்ரட்டீஸ் தலைமை வகித்தார். செயலாளர் அழகேசன் வரவேற்றார். துணைத் தலைவர்கள் வீரணன், கரந்தமலை, பாலசுப்பிரமணியம், பால்பாண்டி முன்னிலை வகித்தனர்.வருவாய் அலுவலர்கள் சங்க பொருளாளர் முத்துப்பாண்டியன் துவக்கி வைத்தார். நிர்வாகிகள் முகைதீன் அப்துல்காதர், வளர்மதி, மாரியப்பன், மணிகண்டன், சுரேஷ், நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர். மணிவாசகம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை