மேலும் செய்திகள்
48 வது பட்டமளிப்பு விழா
24-Aug-2025
சோழவந்தான்: மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரிகளுக்கு இடையேயான பூப்பந்து போட்டியில் திருவேடகம் விவேகானந்தா கல்லுாரி அணி சாம்பியன் பட்டம் வென்றது. வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரியில் நடந்த இறுதிப் போட்டியில் சரஸ்வதி நாராயணன் கல்லுாரியை வென்றது. இதைத்தொடர்ந்து பல்கலை இடையிலான சாம்பியன் டிராபி விருதுநகரில் நடந்தது. இதில் 3ம் இடம் பிடித்தது. முதல்வர் கோப்பை போட் டியில் 2ம் இடம் பிடித்து ரூ 20 ஆயிரம் பரிசு பெற்றது. போட்டியில் வென்ற மாணவர்கள், பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர் நிரேந்தனை கல்லுாரி செயலர் சுவாமி வேதானந்த, குலபதி சுவாமி அத்யாத்மானந்த, முதல்வர் கார்த்திகேயன், துணை முதல்வர் சந்திரசேகரன் பாராட்டினர்.
24-Aug-2025