காத்திருப்பு போராட்டம்
பேரையூர்: திருமங்கலம்- - ராஜபாளையம் புதிய நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.காவெட்டுநாயக்கன்பட்டி விலக்கு அருகே சாலையை கடக்கும் டூவீலர் மீது கனரக வாகனங்கள் மோதி இதுவரை பத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதனால் இந்த இடத்தில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நேற்று காவெட்டுநாயக்கன்பட்டி விலக்கில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். சாலையை அகலப்படுத்தி வசதிகள் செய்து தருவதாக அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து கலைந்து சென்றனர்.