உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தாமிரபரணியில் கழிவுகளை அகற்ற வழக்கு

தாமிரபரணியில் கழிவுகளை அகற்ற வழக்கு

மதுரை, : திருநெல்வேலி முத்துராமன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் டிசம்பரில் கனமழை பெய்தது. வெள்ளப்பெருக்கில் அடித்துவரப்பட்ட பிளாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் தாமிரபரணி ஆற்றில் தேங்கியுள்ளன. இதனால் ஆறு மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. நிபுணர் குழு அமைத்து கழிவுகளை அகற்றக்கோரி திருநெல்வேலி கலெக்டருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு: தற்போதைய நிலை குறித்து கலெக்டர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர், மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் பிப்.,7 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை