உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கரும்பு ஆலைகளில் கழிவுகள் எரிப்பு

கரும்பு ஆலைகளில் கழிவுகள் எரிப்பு

அலங்காநல்லுார்: வாடிப்பட்டி, அலங்காநல்லுரர் பகுதிகளில் வெல்லம் தயாரிக்கும் கரும்பு ஆலைகள் அதிகளவில் செயல்படுகின்றன.இதில் தனிச்சியம், செம்புக்குடிப்பட்டி, விட்டங்குளம், அலங்காநல்லுார் பகுதி கிராமங்களில் உள்ள ஆலைகளில் தொழிற்சாலை கழிவுகளை தொடர்ந்து எரிக்கின்றனர். இப்பகுதி தொழிற்சாலைகளில் வீணாகும் டயர், ரப்பர், ஆயில், சாக்கு போன்ற கழிவுகளை விலைக்கு வாங்கி வந்து ரோட்டின் ஓரங்களில் கொட்டி இருப்பு வைக்கின்றனர். இதனை எரிப்பதால் கரும்புகை சூழ்ந்து காற்று மாசுபடுகிறது. முதியோர், குழந்தைகள் இவ்வழியாக செல்வோர் மூச்சுத் திணறல், கண் எரிச்சலால் பாதிக்கின்றனர். நோய் தொற்று அபாயம் உள்ளது. கரும்பு ஆலைகளில் தீ விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. நச்சுக் கழிவுகளை எரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இதனை கண்டு கொள்வதில்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை