உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தண்ணீர் திறக்காததால் தரிசாகும் சாகுபடி நிலங்கள் நீர்வளத் துறை அலட்சியம்

தண்ணீர் திறக்காததால் தரிசாகும் சாகுபடி நிலங்கள் நீர்வளத் துறை அலட்சியம்

மேலுார்,: பூதமங்கலம் கண்மாய்க்கு தண்ணீர் திறக்காததால் நுாற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் தரிசாக கிடப்பதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.புலிப்பட்டி - குறிச்சிபட்டி வரை 12 வது பெரியாறு பிரதான கால்வாய் வழியாக தண்ணீர் செல்கிறது. இதில் சென்னகரம்பட்டியில் 12 வது மடை 1 வது கால்வாய் வழியாக 4 கி.மீ., துாரத்தில் உள்ள பூதமங்கலம் மற்றும் கஞ்சிதண்ணீர் கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லும். 15 ஏக்கர் பரப்பளவில் உள்ள கண்மாய்கள் நிரம்பினால் நுாற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் பாசனம் பெறும். ஆனால் தண்ணீர் திறந்து 53 நாட்களாகியும் வராததால் விவசாய நிலங்கள் தரிசாக கிடக்கிறது.விவசாயி மணி கூறியதாவது: ஏக்கருக்கு ரூ. 8 ஆயிரம் செலவு செய்து நிலத்தை உழுதுள்ளோம். தண்ணீர் வந்ததும் வயலில் நடுவதற்காக நாற்றுகளை தயார் நிலையில் வைத்துள்ளோம்.ஆனால் இதுவரை தண்ணீர் வராததால் நாற்றுகள் முற்றுவதோடு, நிலங்களும் தரிசாக கிடக்கிறது. அதனால் விவசாயிகள் செய்வதறியாது நிற்கிறோம். நீர்வளத்துறையினரிடம் மனு கொடுத்தும் கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு வராமல் அதிகாரிகள் பொறுப்பற்ற முறையில் நடக்கின்றனர். கலெக்டர் இதில் தலையிட்டு தண்ணீர் திறக்க வேண்டும் என்றார்.நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிவபிரபாகர் கூறுகையில், தண்ணீர் கொடுக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை