உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நடுவுல கொஞ்சம் ரோட்டை காணோம்

நடுவுல கொஞ்சம் ரோட்டை காணோம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் -- அவனியாபுரம் பிரிவு ரோட்டில் ஏராளமான பள்ளங்கள் உள்ளதால் வாகனம் ஓட்டுவோர் அவதி அடைகின்றனர். பலஇடங்களில் நடுவில கொஞ்சம் ரோடும் காணாமல் உள்ளது. திருப்பரங்குன்றத்தில் இருந்து அவனியாபுரம் செல்வதற்காக மெயின்ரோடு கிரிவல ரோடு பகுதியில் உள்ளது. அவனியாபுரம், பாம்பன் நகர், முத்துப்பட்டி, திருப்பரங்குன்றம் நிலையூர் கைத்தறி நகரை சேர்ந்த பொதுமக்களும், கல்லுாரிகள், பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் அந்த ரோட்டை பயன்படுத்துகின்றனர். அந்த ரோடு பல இடங்களில் சேதமடைந்து பள்ளங்களாக உள்ளன. மழை பெய்தால் அந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. பள்ளங்கள் இருப்பது தெரியாமல் டூவீலர்களில் செல்வோர் விழுந்து காயமடைகின்றனர். அந்த ரோட்டை சீரமைக்க நடவடிக்கை தேவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !