உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாணவர்களுக்கு வரவேற்பு

மாணவர்களுக்கு வரவேற்பு

மதுரை: மதுரை செந்தமிழ்க் கல்லுாரியில் இளங்கலை, இளம் இலக்கியம், முதுகலை முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்று, ஆற்றுப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நான்காம் தமிழ்ச்சங்கச் செயலாளர் மாரியப்ப முரளி தலைமை வகித்தார். முதல்வர் சாந்தி தேவி வரவேற்றார்.மதுரைக் கல்லுாரி மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் செந்துாரன் பேசுகையில், ''மாணவர்கள் தமிழ் படிக்க பெருமைப்பட வேண்டும். தமிழில் வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ளன. என்ன படிக்கிறோம் என்பதை விட எப்படி படிக்கிறோம் என்பதே முக்கியம். தமிழ், படிப்பவர்களை உயிர்ப்புடன் வைத்திருக்கும்'' என்றார்.துணை முதல்வர் சுப்புலட்சுமி நன்றி கூறினார். பேராசிரியர் அதிவீரபாண்டியன் தொகுத்து வழங்கினார். மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி