மேலும் செய்திகள்
ரயில் மறியலுக்கு முயன்ற விவசாயிகள் கைது
24-Mar-2025
உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகர் தி.மு.க., சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கிராமியக் கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்டச் செயலாளர் மணிமாறன் தலைமையில் நடந்தது.நகர் செயலாளர் தங்கப்பாண்டியன் முன்னிலை வகித்தார். அவைத்தலைவர் சின்னன் வரவேற்றார். தொகுதி பொறுப்பாளர் செல்லத்துரை, ஒன்றியச் செயலாளர்கள் உசிலம்பட்டி பழனி, முருகன், அஜித்பாண்டி, செல்லம்பட்டி சுதாகரன், முத்துராமன், சேடபட்டி ஜெயச்சந்திரன், செல்வபிரகாஷ், சங்கரபாண்டியன், நகர நிர்வாகிகள் உதய பாஸ்கரன், தேவி, ரமேஷ், அழகர், எழுமலை பேரூராட்சி செயலாளர் ஜெயராமன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடபட்டி ஒன்றிய கிராமியக் கலைஞர்களுக்கு காஸ் அடுப்பு, வேட்டி, சேலை உள்பட நலத்திட்ட உதவிகளை வழங்கினர். பொருளாளர் ஜெயபிரகாஷ் நன்றி கூறினார். நாளை (மார்ச் 28) உசிலம்பட்டி தொகுதி சலவைத் தொழிலாளர்களுக்கு தேய்ப்பு பெட்டி, முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு உபகரணங்கள், மார்ச் 30ல் ஆட்டோ டிரைவர்கள், சுமை துாக்கும் தொழிலாளர்களுக்கு சீருடைகள் வழங்க உள்ளனர்.
24-Mar-2025