நலத்திட்ட உதவி வழங்கல்
மேலுார்: மேலுார் சுப்ரீம் அரிமா சங்கத்தின் புதிய தலைவராக கண்ணன், செயலாளராக ஞானசுந்தரபாண்டியன், பொருளாளராக நவநீதகிருஷ்ணன் பதவி ஏற்றனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக 200 மரக்கன்றுகள் நட்டனர். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆக்சிஜன் கருவிகள், வள்ளலார் அறக்கட்டளைக்கு ஓராண்டிற்கான அரிசி, முக்கம்பட்டி முதியோர் காப்பகத்திற்கு உணவு பொருட்கள், அரசு பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கினர்.