மேலும் செய்திகள்
தினமலர் செய்தியால் தீர்வு ..
24-Jun-2025
சோழவந்தான்: திருவேடகத்தில் தற்காலிக ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வரும் வளாகத்தில் பாழடைந்த கிணறு மூடப்படாமல் இருந்தது. இதனால் அலுவலகத்திற்கு வருவோர் தவறி விழும் நிலைஇருந்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியாகி இருந்தது.இதையடுத்து உடனடி தற்காலிக நடவடிக்கையாக வலை போன்ற அமைப்பால் கிணறு மூடப்பட்டுள்ளது.நிரந்தரமாக மூட விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
24-Jun-2025