இடிச்சு பல மாசமாச்சு எடுக்குற வேலை என்னாச்சு
சோழவந்தான்: சோழவந்தான் அருகே இரும்பாடியில் பழைய மேல்நிலை குடிநீர் தொட்டி இடிக்கப்பட்டு, இடிபாடுகள் அகற்றப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றன.இங்குள்ள ஊராட்சி பள்ளி அருகே பழைய தண்ணீர் தொட்டி இருந்தது. பயன்பாடின்றி ஆபத்தான நிலையில் இடியும் வகையில் இருந்ததால் பல மாதங்களுக்கு முன்பு ஊராட்சி நிர்வாகத்தால் இடிக்கப்பட்டது. இடிபாடுகள் அகற்றப்படாமல் பள்ளி அருகில் மலை போல் குவிந்துள்ளது. இடிபாடுகளில் துருப்பிடித்த கம்பிகள் நீட்டிக் கொண்டும் சரியும் வகையிலும் இருப்பதால் பள்ளி குழந்தைகளுக்கு விபரீதம் ஏற்படும் நிலை உள்ளது. இதுகுறித்து ஊராட்சி அதிகாரியிடம் கேட்டபோது, 'விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.