உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பல மாதங்களாக வீணாகும் குடிநீர் எப்போது தீர்வு கிடைக்குமோ

பல மாதங்களாக வீணாகும் குடிநீர் எப்போது தீர்வு கிடைக்குமோ

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம், பாலசுப்பிர மணியன் நகர், பாலாஜி நகர், திருநகர் பகுதி குடியிருப்புகளுக்கு பெரியாறு குடிநீர் வழங்க அம்ருத் திட்டத்தின்மூலம் வீடுகளுக்கு குழாய் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு வீடுகளில் மீட்டர் பொறுத்தாமல் குழாய்கள் காம்பவுண்ட் சுவருக்கு வெளியில் வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான குழாய்களுக்கு மூடி போடப்படவில்லை. இத்திட்டத்தில் சோதனைக்காக குடிநீர் திறக்கப்படுகிறது. மூடிகள் இல்லாத குழாய்களில் இருந்து வெளியேறும் குடிநீர் பல இடங்களில் பல மாதங்களாக ரோட்டில் சென்று வீணாகிறது. தினம் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் இவ்வாறு வீணாகிறது. குழாய்களில் முறையாக மூடிகள் அமைக்க வேண்டும். இது குறித்து மாநகராட்சி கவுன்சிலர்கள் மண்டல கூட்டத்திலும் அனைத்து கவுன்சிலர்களும் புகார் செய்து வருகின்றனர். ஆனால் இப் பிரச்னைக்கு தீர்வு தான் காணப்படவில்லை. எப்போதுதான் இப் பிரச்னை முடிவுக்கு வரப்போகிறதோ.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை