வனவிலங்கு வாரவிழா போட்டி பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு
மதுரை : தமிழ்நாடு வனத்துறை சார்பில் மதுரை வனக்கோட்டத்தில் அக். 2 முதல் 8 வரை வனவிலங்கு வார விழா கொண்டாடப்படுகிறது. இதன் ஒருபகுதியாக, பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, ஓவியப் போட்டிகள் ஆன்லைனில் நடத்தப்படுகின்றன. வனவிலங்குகளுடன் இணக்கமாக வாழ்வதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 6 முதல் 18 வயதுடைய மாணவர்கள், ஒன்று முதல் 5ம் வகுப்பு, 6 முதல் 8ம் வகுப்பு, 9 முதல் 12ம் வகுப்பு என மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். 'மனிதன் - வனவிலங்கு சகவாழ்வு' எனும் தலைப்பில் மாணவர்கள் தங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஓவியமாக வரைந்தோ, பேச்சாக பதிவு செய்தோ தங்கள் முழு பெயர், அலைபேசி எண், பள்ளியின் பெயர், வகுப்பு உள்ளிட்ட விவரங்களுடன், gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது chat.whatsapp.com/KqsCP8QMRUf37wfvcUVfXT என்ற வாட்ஸ் அப் குழுவிற்கு அனுப்ப வேண்டும். தமிழ் அல்லது ஆங்கிலத்தில் படைப்புகளை அனுப்பலாம். நாளை (அக். 6) இரவு 11:00 மணிக்குள் அனுப்ப வேண்டும். தேர்வு செய்யப்படுவோர், தங்கள் படைப்பின் அசலை மதுரை வனவிலங்கு சரக அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். வெற்றி பெறுவோருக்கு மாவட்ட வன அலுவலர் ரேவ்டி ராமன் தலைமையில் பரிசு, சான்றிதழ் வழங்கப்படும். விவரங்களுக்கு 90472 86690ல் தொடர்பு கொள்ளலாம்.