உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விவசாய பயன்பாட்டுக்கு ரோடு அமைக்கப்படுமா

விவசாய பயன்பாட்டுக்கு ரோடு அமைக்கப்படுமா

சோழவந்தான்: சோழவந்தான் அருகே வி. கோவில்பட்டி கண்மாய் கரையில் ரோடு அமைக்க வேண்டும்' என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவில்பட்டி மணிகண்டன் கூறியதாவது: விக்கிரமங்கலம் பெரிய கண்மாய் கரையில் மண் ரோடு உள்ளது. இதன் வழியே கோவில்பட்டியில் இருந்து அய்யனார் குளம், மம்பட்டிபட்டி, அய்யன் கோவில்பட்டி, உடன் காட்டுப்பட்டிக்கு எளிதாக செல்லலாம். தார் ரோட்டின் வழியே செல்வதென்றால் பல கி.மீ., தொலைவு சுற்றிச் செல்ல வேண்டும். இப்பகுதி விவசாய நிலங்களுக்கு இவ்வழியே ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. உரம் கொண்டு செல்லவும், அறுவடை காலங்களிலும்வாகனங்கள் மண்ரோட்டை பயன்படுத்துகின்றன. மழைக்காலங்களில் மண் ரோடு சேறும் சகதியுமாக மாறி வாகனங்கள் செல்ல முடியாத நிலை உருவாகிறது. பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தப் பலனுமில்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை