உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  ரேஷன் கடை நிரந்தரமாக்கப்படுமா

 ரேஷன் கடை நிரந்தரமாக்கப்படுமா

சோழவந்தான்: சோழவந்தான் அருகே தச்சம்பத்தில் பகுதி நேரமாக செயல்படும் ரேஷன் கடையை நிரந்தரமாக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர். அப்பகுதியைச் சேர்ந்த சந்திரன் கூறியதாவது: ஏராளமான குடும்ப அட்டைதாரர்கள் காளியம்மன் கோயில் தெருவில் வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையில் பொருட்களை வாங்குகின்றனர். இந்தக் கடை வாரத்தில் ஒரு நாள் மட்டும் பகுதி நேரமாக செயல்படுகிறது. மாதம் 4 நாட்கள் மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. இதனால் வேலைக்கு செல்லும் பலரால் வாங்க முடிவதில்லை. விடுப்பு எடுத்து பொருட்களை வாங்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பலர் ஓரிரு மாதங்கள் கூட பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே பகுதி நேரமாக செயல்படும் கடையை நிரந்தரமாக்க வேண்டும். ரேஷன் கடைக்கு புதிதாக சொந்தக் கட்டடம் அமைக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை