உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  சாக்கடை கால்வாய் சீரமைக்கப்படுமா

 சாக்கடை கால்வாய் சீரமைக்கப்படுமா

சோழவந்தான்: சோழவந்தான் அருகே ராயபுரம் ஜெர்மேன் நகரில் சாக்கடை கால்வாயை சீரமைக்க வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தினர். இப்பகுதியைச் சேர்ந்த குழந்தைதெரஸ் கூறியதாவது: இங்கு நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் ஏராளமானோர் வசிக்கிறோம். சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சாக்கடை கால்வாய் பணியின்போது, சரியான வாட்டம் அமைத்து கட்டவில்லை. இக்கால்வாய் ராயபுரம் கண்மாயில் இணைக்கப்பட்டுள்ளது. கழிவு நீர் கண்மாயில் கலப்பதற்கு பதிலாக, கண்மாய் நீர்தான் சாக்கடை கால்வாய் வழியாக மேலே (எதிர்புறம்) ஏறி தேங்கி நிற்கிறது. இதனால் கழிவுகள் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல வழியின்றி வீடுகளுக்குள் புகுந்து சிரமம் ஏற்படுகிறது. பாம்பு, பூரான், தேள் உள்பட விஷ ஜந்துக்களின் நடமாட்டத்தால் அச்சத்துடன் வாழ வேண்டியுள்ளது. ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் பலனில்லை. மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி