திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகம் உள்ளூர் விடுப்பு அறிவிக்கப்படுமா
மதுரை: திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷே கம் நடக்க உள்ளதையடுத்து அன்று உள்ளூர் விடுப்பு அறிவிக்கும்படி ஹிந்து மக்கள் கட்சியும், விஸ்வ ஹிந்து பரிஷத்தும் வலியுறுத்தி உள்ளன.இ.ம.க., மாவட்ட தலைவர் சோலைகண்ணன், வி.எச்.பி., மாநில துணை பொதுச்செயலாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளதாவது: இக்கோயிலில் நடக்க உள்ள கும்பாபிஷே கத்தில் பங்கேற்க மதுரை மட்டுமின்றி தமிழகம், உலகம் முழுவதும் உள்ள பல லட்சம் பக்தர்கள் பாதயாத்திரை, வாகனங்கள் மூலம் திருப்பரங்குன்றம் வருவர். இதனால் பள்ளி, கல்லுாரி, அலுவலகங்கள் செல்வோருக்கு உள்ளூர் மட்டுமின்றி மதுரை மாவட்டம் முழுவதும் போக்குவரத்து இடையூறு ஏற்படும். திருச்செந்துார் கோயில் கும்பாபிஷே கத்திற்கு உள்ளூர் விடுப்பு அறிவித்ததை போல திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகத்தின் போதும் உள்ளூர் விடுப்பு அறிவிக்க வேண்டும்.