மேலும் செய்திகள்
'நடிகர்' ஆக மேயர்; 'சீட்' பெற பா.ஜ., 'பிரேயர்'
15-Apr-2025
தெருநாய் கடித்ததில்6 ஆடுகள் பலி
20-Apr-2025
மதுரை : மதுரையில் நேற்று மாலை ஆட்டோக்கள் மோதிக்கொண்டதில், 'சைடு மிரர்' உடைந்து தகடு கழுத்தை கிழித்ததில் பெண் பயணி பலியானார்.மதுரை மேலவாசல் குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் வீரய்யா. துாய்மை பணியாளர். இவரது மனைவி மாரியம்மாள் 36. நேற்று மாலை அரசரடியில் இருந்து பெரியார் பஸ் ஸ்டாண்டிற்கு ஷேர் ஆட்டோவில் சென்றார்.மகபூப்பாளையம் பகுதியில் வந்தபோது டூவீலரில் வந்த இருவர், ஒரு ஆட்டோவில் மோத, அந்த டிரைவர் நிலைகுலைந்து மாரியம்மாள் வந்த ஆட்டோ மீது மோதினார். மோதிய வேகத்தில் ஆட்டோவின் 'சைடு மிரர்' உடைந்து, அதைச் சுற்றி இருந்த தகடு 'கட்' ஆகி, ஷேர் ஆட்டோவில் இருந்த மாரியம்மாள் கழுத்தை கிழித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற பயணிகள் லேசான காயமடைந்தார். போக்குவரத்து குற்றப்புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.
15-Apr-2025
20-Apr-2025