கார் மோதி பெண் பலி
எழுமலை: மட்டப்பாறையைச் சேர்ந்தவர் சாரதா 55. எழுமலை அருகே ராஜாக்காபட்டியில் உறவினரின் வீட்டு விழாவிற்கு சீர்வரிசை எடுத்துக்கொண்டு காரில் உறவினர்களுடன் வந்தார். விழா முடிந்த பின் காரை அவரது உறவினரான ஆர்த்தி 36 , என்பவர் எடுத்த போது எதிர்பாராத விதமாக அருகில் நின்றிருந்த சாரதாவின் மீது மோதியதில் அவர் பலியானார். எழுமலை போலீசார் விசாரிக்கின்றனர்.