உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / லாரி மோதி பெண் பலி

லாரி மோதி பெண் பலி

திருமங்கலம்: திருமங்கலம் கூத்தியார்குண்டை சேர்ந்தவர் பெரியசாமி 48. இவரது மனைவி மகேஸ்வரி 46, பெரியசாமி தனக்கன்குளம் ஊராட்சியில் துாய்மை பணியாளராக வேலை செய்தார். நேற்று பெரியசாமி, மகேஸ்வரி, இவர்களது மகன் வழி பேரன் சிவ நித்திஷ் 3, கடைக்கு டூவீலரில் சென்றனர். விருதுநகர் --- சமயநல்லுார் நான்கு வழிச்சாலையில் மொட்டைமலை அருகே சென்ற போது பின்னால் வந்த லாரி மோதியது. இதில் நிலை தடுமாறி டூ வீலர் சரிந்த போது கீழே விழ போகிறோம் என உணர்ந்த மகேஸ்வரி கையில் வைத்திருந்த பேரனை மண் தரையில் வீசியுள்ளார். இதன்பின் ரோட்டில் விழுந்த மகேஸ்வரி தலை மீது லாரி ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். பெரியசாமி, சிவநித்திஷ் சிறு காயங்களோடு தப்பினர். லாரி நிற்காமல் சென்று விட்டது. ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி