உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பெண் கொலை  ஒருவருக்கு ஆயுள்

பெண் கொலை  ஒருவருக்கு ஆயுள்

மதுரை, அக்.30- மதுரை புதுார் மணிகண்டன் 50. இவர் கோயிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும்; கூழ் காய்ச்சி ஊற்ற வேண்டும் எனக்கூறி மகாத்மா காந்தி நகர் சி.ஆர்.ஓ.,காலனியில் தனியாக வசித்த மோகனா 76,விடம் அடிக்கடி நன்கொடை பெற்றுச் செல்வார். இவ்வாறு தொந்தரவு செய்யக்கூடாது என அப்பெண் கண்டித்துள்ளார். 2016 ல் அப்பெண் வீட்டில் கழுத்து நெரிக்கப்பட்டு, கயிற்றால் கைகளை கட்டி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவர் அணிந்திருந்த 8 பவுன் நகை திருடுபோனது. மணிகண்டன் மீது கூடல்புதுார் போலீசார் வழக்கு பதிந்தனர். விசாரணை மதுரை 6 வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி உதயவேலவன் உத்தரவு: மணிகண்டன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஆயுள் தண்டனை, ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ