கொலு பொம்மை வாங்க ஆர்வம் காட்டும் பெண்கள்; விளாச்சேரி தயாரிப்புகளில் புதுமை
திருப்பரங்குன்றம் : மதுரை விளாச்சேரியில் தயாராகும் நவராத்திரி கொலு பொம்மைகளை ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பொம்மை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளன. தற்போது நவராத்திரி விழாவுக்காக கொலு பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன. தயாரிப்பாளர் ராமலிங்கம் கூறுகையில், ''பரம்பரையாக பொம்மைகள் தயாரித்து வருகிறோம். நவராத்திரிக்காக வழக்கமாக தயாரிக்கும் பொம்மைகளுடன் இந்தாண்டு புதிதாக நவீன தொழில் நுட்பத்துடன் கண்ணாடி கற்களால் விநாயகர், 10 தலைகள் 20 கைகளுடன் விஸ்வரூப பெருமாள், 10 கைகளுடன் சந்தோஷிமா துர்க்கை, கங்கை மண்ணால் ஆஞ்சநேயர் சிலை, வேலைப்பாடுகளுடன் ஆண்டாள் ரங்க மன்னார், மாயா பஜார் கடோத்கஜன், குபேரர் பானைகள், வெள்ளி ஆபரண கலரில் பல்வேறு சுவாமி சிலைகள், மூன்று இஞ்ச் முதல் இரண்டு அடி உயரம்வரை களி மண், காகிதக் கூழால் தயாரித்துள்ளோம். கடந்தாண்டைக் காட்டிலும் இந்தாண்டு அதிகமான பெண்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர் என்றார்.