உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / துணி உறையுடன் கம்பளிப் போர்வை; மதுரை ரயில்வே கோட்டத்தில் அறிமுகம்

துணி உறையுடன் கம்பளிப் போர்வை; மதுரை ரயில்வே கோட்டத்தில் அறிமுகம்

மதுரை : தெற்கு ரயில்வேயின் மதுரைக் கோட்டத்தில் முதன்முறையாக பயணிகளுக்கு, துணி உறையுடன் கூடிய கம்பளிப் போர்வை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.ரயில்களில் குளிர்சாதன பெட்டியில் பயணம் செய்யும் பயணிகளுக்கு 2 படுக்கை விரிப்புகள், ஒரு தலையணை மற்றும் உறை, கம்பளிப் போர்வை, கைத்துண்டு வழங்கப்படுகின்றன. அதில் கம்பளிப் போர்வை, தலையணை தவிர மற்ற படுக்கைத் துணிகள் ஒவ்வொரு உபயோகத்திற்குப் பின்பும் சலவை செய்யப்படுகிறது. கம்பளிப் போர்வை மட்டும் 15 முதல் 30 நாட்களுக்கு ஒருமுறை உலர் சலவை செய்யப்படுகிறது. இதுகுறித்து பயணிகள் பல்வேறு கருத்துகளையும் ஆலோசனைகளையும் தெரிவித்தனர்.இந்நிலையில் பயணிகளுக்கு துாய்மையான, சுகாதாரமான கம்பளிப் போர்வை வழங்கும் நோக்கில் மதுரை கோட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (டிச.10) முதல் சென்னை செல்லும் பாண்டியன் விரைவு ரயிலின் குளிர்சாதன வகுப்புபயணிகளுக்கு கம்பளி போர்வைகள் தனித்தனி துணி உறைகளுடன் வழங்கப்பட்டன. இந்த துணியாலான உறைகளில் கம்பளிப் போர்வை வைக்கப்பட்டு வெளியே வராதபடி ஒட்டப்படுகிறது. ஒவ்வொரு முறை உபயோகத்திற்கு பின்னும் உறை மட்டும் கழற்றி சலவை செய்யப்படுகிறது. உறையை பயன்படுத்துவதன் மூலம், கம்பளிப் போர்வையை சுகாதாரமாக பாதுகாக்க முடியும். ரயில்வேயின் இம் முயற்சியை பயணிகள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ