தொழிலாளி மர்ம மரணம்
சோழவந்தான்: சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கணேசன் 45, கூலி தொழிலாளி. திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இவர் திருமணமாகி குழந்தைகள் உள்ள பெண்ணுடன் 3 ஆண்டுகளாக நெருங்கி பழகி வந்தார். இதனை சிலர் கண்டித்தனர். நேற்று மாலை கணேசன் கழுத்து அறுபட்டு வீட்டில் இறந்து கிடந்தார். கணேசன் வீட்டிற்கு அவர் பழகி வந்த பெண் வந்து சென்றதை அப்பகுதியினர் பார்த்துள்ளனர். தற்போது அந்த பெண் மாயமான நிலையில் கணேசன் கொலை செய்யப்பட்டாரா, தற்கொலை செய்துகொண்டாரா என காடுபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.