பணிமனை கூட்டம்
மதுரை: வேளாண்மை அலுவலர்களுக்கான மாதாந்திர பணிமனை கூட்டம் மதுரை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் துணை இயக்குனர் ராணி தலைமையில் நடந்தது. பருத்தி, மக்காச் சோளத்தில் பூச்சி மேலாண்மை என்ற தலைப்பில் நிலையத் தலைவர் சுரேஷ் பேசினார். வேளாண்மை துணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள், வேளாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.