பள்ளிக்கு உலகசாதனை விருது
மதுரை: மதுரை ஆனையூர் துரோணா குளோபல் பள்ளிக்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டது. இப்பள்ளியில் நடந்த குழந்தைகள் தினவிழாவில் 'ஒற்றுமையின் குரல்' என்ற தலைப்பில் 235க்கும் மேற்பட்ட மொழிகளில் குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகளை மழலை பிரிவு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்கள், ஆசிரியர்கள் தெரிவித்து, சாதனை படைத்தனர். இதற்காக கிங்டம் உலக சாதனை நிறுவன நிர்வாக இயக்குநர் செல்வராஜ், உலக சாதனை சான்று, விருதை பள்ளி தாளாளர் சரண்ராஜிடம் வழங்கினார். சாதனையில் ஈடுபட்ட மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. முதல்வர் டயானா, ஆசிரியர்கள் பங்கேற்றனர்.