மேலும் செய்திகள்
வேளாண் பல்கலையில் உணவு தின கொண்டாட்டம்
21-Oct-2025
உணவளித்தல் புண்ணியம்; வீணாக்குதல் பாவம்
16-Oct-2025
மதுரை: மதுரை லேடி டோக் கல்லுாரியின் வேதியியல் துறை, வாய்ஸ் அறக்கட்டளை சார்பில், கருப்பாயூரணி அப்பர் மேல்நிலைப் பள்ளியில் உலக உணவு தினம், தேசிய உணவு தினம் கொண்டாடப்பட்டது. உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து, நிலையான உணவு நடைமுறைகளை வலியுறுத்தி, நல்வாழ்வு, பொறுப்பான நுகர்வு, உற்பத்தியை மேம்படுத்துவதின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தினர். இதில் குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மைய மாநில தலைவர் கர்ணன், கிழக்கு தொகுதி உணவுப் பாதுகாப்பு அலுவலர் சந்திரமோகன் பங்கேற்றனர். பின்னர் உணவுப் பாதுகாப்பு, தரநிலைகளை நோக்கி நுகர்வோர் விழிப்புணர்வு என்ற தலைப்பில் கண்காட்சி நடந்தது. இதில் ஊட்டச்சத்து, இயற்கை, செயற்கை உணவு சேர்க்கைகள், கலப்படம், பூச்சிக் கொல்லிகளால் பாதிப்பு போன்ற தலைப்புகளில் செயல் விளக்கம் நடத்தப்பட்டது. பேராசிரியர் ஸ்ரீதேவி, பாடநெறி உதவியாளர்கள் அனுஷாராணி, சில்வியா ரீட்டா, அறக்கட்டளை நிறுவனர் முருகேசன் ஏற்பாடு செய்தனர்.
21-Oct-2025
16-Oct-2025