நுாலகர் தின விழா
திருமங்கலம்: திருமங்கலம் கிளை நுாலகம் சார்பில் நுாலக தந்தை ரங்கநாதன் பிறந்தநாள் விழா மற்றும் நுாலகர் தின விழா கொண்டாடப்பட்டது. நகராட்சி துணைத் தலைவர் ஆதவன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட நுாலக அலுவலர் இளங்கோ முன்னிலை வகித்தார். திருமங்கலம், கள்ளிக்குடி பகுதி நுாலகங்களில் வேலை செய்யும் நுாலகர்களுக்கு நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. வாசகர் வட்ட நிர்வாகிகள் பிரசன்னா, முருகன், இருளப்பன், சக்கையா, திருமங்கலம் தென்றல் அரிமா சங்கத் தலைவர் ராஜபிரபாகரன், செயலாளர் குழந்தைவேல், பொருளாளர் குட்டி கலந்து கொண்டனர். திருமங்கலம் நுாலகர் மலர்விழி நன்றி கூறினார்.