உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குன்றத்தில் இன்று மாலை யாகசாலை பூஜை துவக்கம் ஜூலை 14ல் கும்பாபிஷேகம்

குன்றத்தில் இன்று மாலை யாகசாலை பூஜை துவக்கம் ஜூலை 14ல் கும்பாபிஷேகம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் கும்பாபிஷேகத்திற்காக இன்று (ஜூலை 10) மாலை 5:00 மணிக்கு யாக சாலை பூஜை துவங்குகிறது.இதைமுன்னிட்டு சிவாச்சாரியார்கள் நேற்று காலை சரவணப் பொய்கை ஆறுமுக நயினார் கோயிலில் குடங்களில் புனித நீர் நிரப்பி பூஜை செய்து நீராடினர். யாக சாலையில் திருப்பரங்குன்றம், ராமேஸ்வரம் உட்பட 7 ஸ்தலங்களின் புனித நீர் நிரப்பி பூஜை செய்யப்படுகிறது. கோயில் யானை தெய்வானை புத்துணர்வு முகாம் சென்றுள்ளதால் தருமபுர ஆதின மடம் யானை வரவழைக்கப்பட்டுள்ளது. அதன் மீது பொய்கையில் இருந்து தங்க குடத்தில் புனித நீர் எடுத்து வரப்பட்டது.

புனித மண் எடுத்தல்

பூர்வாங்க பூஜையின் 6ம் நாளான நேற்று மாலை சன்னதி தெரு சொக்கநாதர் கோயிலில் வில்வ மரத்தின் அடிப்பகுதியில் இருந்து புனித மண் எடுத்து யாக சாலையில் வைக்கப்பட்டது. யாகசாலை பூஜைக்காக இன்று காலை சூரியனிடமிருந்து நெருப்பு பெறும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு யாகசாலை பூஜை துவங்குகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யாகசாலை முழுவதும் பாதுகாப்பு கெமிக்கல் ஸ்பிரே அடிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை