உள்ளூர் செய்திகள்

யோகா தின பேரணி

மதுரை: மதுரையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.ரயில்வே மேல்நிலைப் பள்ளி, ரயில்வே மகளிர் நலச்சங்க மெட்ரிக் பள்ளி மாணவர்கள், சாரணர்கள், தன்னார்வலர்கள், ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார், பணியாளர்கள் பங்கேற்றனர்.கோட்ட மேலாளர் அலுவலகத்தில் துவங்கி ரயில்வே காலனி வழியாக ரயில்வே இன்ஸ்டிடியூட்டில் ஊர்வலம் முடிவுற்றது. கோட்ட பணியாளர் அதிகாரி சங்கரன், ரயில்வே மேல்நிலைப் பள்ளி முதல்வர் அஞ்சம்மாள் கலந்து கொண்டனர். இன்று (ஜூன் 21) ரயில்வே காலனி மைதானத்தில் கோட்ட மேலாளர் தலைமையில் காலை 7:00 முதல் 7:45 மணி வரை யோகா நிகழ்ச்சிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி