மாநகராட்சி கமிஷனரிடம் தயிர் மார்கெட் வியாபாரிகள் மனு
மதுரை: மதுரையில் கீழமாரட் வீதி தயிர் மார்க்கெட் கட்டட கடையில் உள்ள காய்கனி வியாபாரிகள் சங்கம், மாநகராட்சி கட்டிய புதிய கடைகளுக்கு விதிக்கப்பட்ட வாடகையை குறைக்க கோரி கமிஷனர் தினேஷ்குமாரிடம் மனு அளித்தனர்.மாநகராட்சி அ.தி.மு.க., எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா தலைமையில் இச்சங்க தலைவர் தேவதாஸ், செயலாளர் சரவணன், பொருளாளர் சுப்பையா உள்ளிட்ட நிர்வாகிகள் கமிஷனரிடம் மனு அளித்தனர். அதில், கீழமாரட்வீதியில் இச்சங்கம் 50 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டை தற்போது மாநகராட்சி புதிதாக கட்டியுள்ளது. இதை ஏலம் மூலம் ஒதுக்கீடு செய்ய முயற்சி நடக்கிறது.ஏற்கனவே பல ஆண்டுகளாக கடை நடத்தி வரும் வியாபாரிகள் முன்னுரிமை அளித்து அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்காதவாறு கடைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும் மாதம் வாடகையாக ரூ.4 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை குறைத்து நிர்ணயிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.