உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உழவர் நல சேவை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம்

உழவர் நல சேவை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம்

மதுரை: இளநிலை விவசாயம், தோட்டக்கலை, வேளாண் சார்ந்த பட்டதாரிகள் உழவர் நல சேவை மையம் துவங்க விண்ணப்பிக்கலாம். மதுரை மாவட்டத்தில் வேளாண் துறையின் கீழ் 20 பேர், தோட்டக்கலையில் 12, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறையின் கீழ் தலா 3 பேர் என 38 பேர் தொழில் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பிரபா கூறியதாவது: முதல்வரின் உழவர் நல சேவை மையம் அமைத்தால் விவசாயிகளுக்கு தரமான இடுபொருட்கள், உரங்களை வழங்குவதோடு தொழில்நுட்ப ஆலோசனையும் வழங்க முடியும். இம்மையத்தில் வேளாண் விளைபொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்வதற்கும் வாய்ப்புள்ளது. 300 சதுர அடியில் மையம் அமைத்து வேளாண் இடுபொருட்கள் விற்பனை செய்பவர்கள் ரூ.10 லட்சம் வரையான முதலீட்டில் தொழில் துவங்கலாம். இதற்கு ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. 600 சதுர அடியில் மையம் அமைத்தால் ரூ.20 லட்சம் முதலீட்டுடன் ரூ.6 லட்சம் வரை மானியம் பெற முடியும். வேளாண், வேளாண் சார்ந்த படிப்பு முடித்த 45 வயதுக்குட்பட்ட பட்டதாரிகள் www.tnagrisnet.tn.gov.in/kaviaDP/regis ter இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் கடன் தொகைக்கான வேளாண் உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின் 3 சதவீத வட்டி மானியமும் பெற முடியும். விருப்பமுள்ளோர் அந்தந்த வட்டார வேளாண், தோட்டக்கலை துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை