உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆன்லைனில் பகவத் கீதை கற்கலாம்

ஆன்லைனில் பகவத் கீதை கற்கலாம்

மதுரை : மதுரை திருப்பாலை இஸ்கான் கோயில் சார்பில் பகவத் கீதை ஜெயந்தியை முன்னிட்டு இன்று (நவ.20) முதல் டிச. 9 வரை ஆன்லைன் மூலம் பகவத் கீதை கற்கலாம்.கோயிலின் ஆன்மிக மனிதவள மேலாளர் வம்சிதாரி தாசர் பயிற்சி அளிக்கிறார்.அவர் கூறியதாவது: நவ.20 முதல் டிச. 9 வரை தினமும் இரவு 7:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை ஆன்லைன் மூலம் பகவத் கீதை முழுமையாக கற்றுத்தரப்படும். பங்கேற்பவர்களுக்கு பகவத் கீதை பரிசாக வழங்கப்படும். சான்றிதழ் உண்டு. எளிய தமிழில் ஆழமான விளக்கங்களுடன் கற்றுத்தரப்படும். அனுமதி இலவசம் என்றார். நிகழ்ச்சியில் பங்கேற்க கியூ ஆர் கோடுஐ ஸ்கேன் செய்யவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ