உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உடற்பயிற்சியில் ப ெ ண் டாக்டரை வீடியோ எடுத்த இளைஞர் கைது

உடற்பயிற்சியில் ப ெ ண் டாக்டரை வீடியோ எடுத்த இளைஞர் கைது

மதுரை: 'ஜிம்'மில் உடற்பயிற்சி செய்த பெண் டாக்டரை, மொபைல் போனில் வீடியோ எடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.மதுரை அய்யர் பங்களாவில் வசந்தகுமார் என்பவர் நடத்தும் ஜிம்மில், மொபைல் போன்கள் பயன்படுத்த அனுமதி இல்லை. அங்கு பயிற்சி பெற்று வந்த சிலம்பரசன், 24, என்பவர் மொபைல் போனை மறைத்து எடுத்து வந்து, பயிற்சியில் ஈடுபட்ட பெண் டாக்டரை தொடர்ந்து வீடியோ எடுத்துள்ளார்.இதை கவனித்த டாக்டர், குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் வந்து சிலம்பரசனின் மொபைல் போனை ஆய்வு செய்தபோது, அதில் அவர் ஏடாகூடமாக வீடியோ எடுத்தது தெரிந்தது.இதுகுறித்து கேட்டபோது, அவர்களிடம் சிலம்பரசன் தகராறு செய்தார் என கூறப்படுகிறது. பின், அவர் அந்த பெண் டாக்டரிடம் மன்னிப்பு கேட்டார். ஜிம் நிர்வாகம் அளித்த புகாரின்படி, சிலம்பரசனை தல்லாகுளம் போலீசார் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை