மேலும் செய்திகள்
தீபாவளி வசூலுக்கு 'மதுவிலக்கு விரிக்குது வேஷ்டி'
30-Sep-2025
மதுரை: அரசு தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் தோல்வி அடைந்ததால் விரக்தி அடைந்த மதுரை இளைஞர் சந்துரு 21, தற்கொலை செய்து கொண்டார். மதுரை முடக்கத் தானைச் சேர்ந்தவர் செல்வம். இவரது 3வது மகன் சந்துரு. பி.இ., பட்ட தாரியான இவர், குரூப் 4 தேர்வுக்கு படித்து வந்தார். இரு மாதங்களுக்கு முன் நடந்த குரூப் 4 தேர்வில் பங்கேற்றார். தேர்ச்சி பெற்றுவிடுவோம் என நம்பிக்கையுடன் காத் திருந்தார். அக்.22ல் தேர்வு முடிவு வெளியானது. இதில் சந்துரு குறைவான மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெறவில்லை. இதனால் மனஉளைச் சலுக்கு ஆளானார். யாரிடமும் பேசாமல் மனஅழுத்தத்தில் இருந்த வரிடம் குடும்பத்தினர் ஆறுதல் கூறி 'அடுத்து நடக்கும் தேர்வில் நிச்சயம் வெற்றி பெறுவாய்' என 'கவுன்சிலிங்' கொடுத்தனர். நேற்றுமுன்தினம் மதியம் சாப்பிட்டு விட்டு படுக்கை அறைக்கு சென்றவர், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கூடல்புதுார் போலீசார் விசாரிக் கின்றனர். தற்கொலை தீர்வு அல்ல மனநல டாக்டர்கள் கூறியதாவது: சந்துருவுக்கு இன்னும் அடுத்தடுத்த தேர்வில் போட்டியிட வயது இருக்கும்போது தற்கொலை செய்து கொண்டது வருத்தம்தான். தோல்வி ஏற் பட்டால் அதையே அடுத்த தேர்வுக்கு உந்துதலாக எடுத்துக்கொண்டு படித்து வெற்றி பெற வேண்டும். சிலர் சிறு வயதிலேயே பிடிவாதம், நினைத்தது கிடைக்க வேண்டும் என்ற மனநிலையில் இருப்பார்கள். அவர்கள் நினைத்தது கிடைக்காவிட்டால், நடக்காவிட்டால் எந்த எல்லைக்கும் செல்வர். அவர்களுக்கு மனநல கவுன்சிலிங் அவசியம். தற்போதைய சூழலில் மத்திய, மாநில அரசு தேர்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டதான் இருக்கிறது. தொடர்ந்து முயற்சி செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். இதை தேர்வர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். தற்கொலை தீர்வு தராது. போராடி வெற்றி பெறும்போது 'நாம் சாதித்துவிட்டோம்' என்ற உணர்வு ஏற்படும். இவ்வாறு கூறினர்.
30-Sep-2025