உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / முன்விரோதத்தில் வாலிபர் வெட்டிக்கொலை

முன்விரோதத்தில் வாலிபர் வெட்டிக்கொலை

மதுரை: முன்விரோதத்தில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்டார். மதுரை, பெருங்குடி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கருமலை, 26. அவரது நண்பர் அதே பகுதி பாலமுருகன், 26. கடந்தாண்டு நடந்த முனீஸ்வரன் கொலை வழக்கில் கருமலை முக்கிய குற்றவாளியாகவும், பாலமுருகன் ஆறாவது குற்றவாளியாகவும் சிறையில் இருந்தனர். இருவரும் ஜாமினில் வந்த நிலையில், மற்றொரு வழக்கில் கருமலை கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். மூன்று நாட்களுக்கு முன் அவர் ஜாமினில் வந்தார். முன்னெச்சரிக்கையாக கருமலை கீரைத்துறையில் வசித்தார். நேற்று பாலமுருகனை சந்திக்க கருமலை அம்பேத்கர் நகர் சென்ற போது, ஆறு பேர் கும்பல் கருமலை, பாலமுருகனை வெட்டினர். கருமலை பலியானார். பாலமுருகன் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கருமலை உறவினர்கள் குற்றவாளிகளை கைது செய்ய, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முனீஸ்வரன் கொலைக்கு பழி தீர்க்க கருமலை கொலை நடந்திருக்கலாம் என, விசாரணையில் தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
ஜூலை 28, 2025 03:36

நித்தமும் பல கொலைகள், பாலியல் வன்கொடுமைகள். எல்லாம் கையாலாகாத "அப்பா" ஆட்சியின் சாதனை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை