உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இளைஞர்கள் எழுச்சி மாநாடு

இளைஞர்கள் எழுச்சி மாநாடு

மதுரை : மதுரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தென்மண்டல இளைஞர்கள் எழுச்சி மாநாடு மாநில பொதுச் செயலர் முஜீபுர் ரஹ்மான் தலைமையில் நடந்தது. இளைஞர்கள் கெடுவதற்கு காரணம் பெற்றோரா, சமூக வலைதளங்களா என சுலைமான் தலைமையில் பட்டிமன்றம் நடந்தது. முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், இளைஞர்களை நல்வழிப்படுத்தும் விதம் குறித்து மாநிலத் தலைவர் அப்துல் கரீம், தணிக்கைக்குழுத் தலைவர் சுலைமான், மேலாண்மைக்குழுத் தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி பேசினர். போதை பொருட்களுக்கு எதிராக இளைஞர்கள் உறுதி ஏற்க வேண்டும். முஸ்லிம் இடஒதுக்கீடை 7 சதவீதம், முதற்கட்டமாக 5 சதவீதமாவது அதிகரிக்க வேண்டும். வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி