உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மண்டல ஹேண்ட் பால் போட்டி

மண்டல ஹேண்ட் பால் போட்டி

மதுரை, : பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் மதுரை எஸ்.பி.ஓ.ஏ., பள்ளியில் மண்டல பள்ளிகளுக்கு இடையிலான ஆடவர் பிரிவு ஹேண்ட் பால் போட்டி நடந்தது. 14 வயது, 17 மற்றும் 19 வயது பிரிவுகளில் தலா 14 அணிகள் பங்கேற்றன.போட்டி முடிவுகள்: 14 வயது பிரிவு இறுதிப் போட்டியில் சி.எஸ்.ஆர். பள்ளி 13 - 11 புள்ளிகளில் கெரன் பள்ளியை வீழ்த்தியது. 17 வயது பிரிவில் தனபால் பள்ளி 16 - 10 புள்ளிகளில் சி.எஸ்.ஆர்., பள்ளியை வீழ்த்தியது. 19 வயது பிரிவில் தனபால் பள்ளி 8 - 7 புள்ளிகளில் லார்ட் வெங்கடேஸ்வரா பள்ளியை வீழ்த்தியது. வென்ற அணிகள் மாநில ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றன. உடற்கல்வி ஆசிரியர்கள் சுரேஷ், சக்திவேல், சுதர்சன் ஏற்பாடுகளை செய்தனர். எம்.ஜி.ஆர்., ஹேண்ட்பால் அகாடமி நிர்வாகி அன்பரசன், பயிற்சியாளர் குமார், மதுரை ஹேண்ட்பால் சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ