மண்டல கபடி போட்டிகள்
திருமங்கலம்: மதுரை காமராஜ் பல்கலை டி பிரிவு மண்டல கபடி போட்டிகள் திருமங்கலம் பி.கே.என்., கலை, அறிவியல் கல்லுாரியில் நடந்தது. நிகழ்ச்சியில் கல்லுாரி முதல்வர் கணேசன் வரவேற்றார். கல்லுாரி நிர்வாக குழுத் தலைவர் தினேஷ் தலைமை வகித்தார். செயலாளர் செல்வம் போட்டியை தொடங்கி வைத்தார். இரண்டு நாட்கள் நடந்த போட்டிகளில் 30க்கும் மேற்பட்ட கல்லுாரி அணிகள் கலந்து கொண்டன. இதில் ராஜபாளையம் ராஜூஸ் காலேஜ் அணி வெற்றி பெற்றது. சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி 2ம் இடம் பெற்றனர். கல்லுாரி பொருளாளர் மணி சேகர் நன்றி கூறினார்.