உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / தனியார் பஸ் மோதி 3 வாலிபர்கள் பலி

தனியார் பஸ் மோதி 3 வாலிபர்கள் பலி

மயிலாடுதுறை: சீர்காழி அருகே இரு பைக்குகளில் சென்ற மூவர் தனியார் பஸ் மோதி இறந்தனர்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கதிராமங்கலத்தை சேர்ந்தவர்கள் ரமேஷ் மகன் மணிகண்டன்,22; ஜெயசீலன், 19; இருவரும் பைக்கில் கதிராமங்கலம் மெயின் ரோட்டில் சென்றுக் கொண்டிருந்தனர். இவர்களுக்கு பின்னால், ஆலவெளி கிராமத்தை சேர்ந்த அன்பழகன் மகன் புருஷோத் தமன், 27; சென்றுக் கொண்டிருந்தார்.அப்போது சீர்காழியில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற தனியார் பஸ், இரு பைக்குகள் மீது மோதியது. அதில் படுகாயமடைந்த மணிகண்டன், ஜெயசீலன், புருஷோத்தமன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.இதுகுறித்து வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் வழக்கு பதிந்து, தப்பி ஓடிய தனியார் பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை