உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / பெண் போலீசை திட்டிய 2 ரவுடி மீது வழக்கு பதிவு

பெண் போலீசை திட்டிய 2 ரவுடி மீது வழக்கு பதிவு

மயிலாடுதுறை:மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரத்தை சேர்ந்தவர் கபிரியேல், 52. இவர் வேலுார் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். இவரை, கடந்த 2012ம் ஆண்டு பூம்புகார் அடுத்த மேலையூரில் நடந்த கொலை வழக்கு விசாரணைக்காக நேற்று முன்தினம் மயிலாடுதுறை கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது இதே வழக்கில் ஆஜராக வந்த மற்றொரு ரவுடி வெள்ளப்பள்ளம் வினோத், 40, கபிரியேலை சந்தித்து பேசினார். அதனைக் கண்ட மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் சுப்ரியா, இருவரையும் எச்சரித்து, பேச தடை விதித்தார். ஆத்திரமடைந்த இருவரும், இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசாரை ஒருமையில் திட்டி மிரட்டினர்.இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சுப்ரியா அளித்த புகாரின்படி, ரவுடிகள் கபிரியேல், வினோத் ஆகியோர் மீது மயிலாடுதுறை போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை