மேலும் செய்திகள்
தோட்டத்தில் மின் மோட்டார் ஒயர் திருட்டு
06-Aug-2024
மயிலாடுதுறை:மயிலாடுதுறை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி நூதன முறையில் பண மோசடி செய்த ஆந்திராவை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு போலீஸ் சரகம் புத்தமங்கலம் மாரியம்மன் கோவில் தோப்பு தெருவை சேர்ந்தவர் ராஜசேகர், ரேணுகாதேவி தம்பதியினரின் மகள் ரூபஸ்ரீ.9. மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்துள்ளார் இந்நிலையில் இதனை அறிந்த ஆந்திராவை சேர்ந்த இரு நபர்கள் ராஜசேகர் மற்றும் ரேணுகா தேவியை அனுகி ரூபஸ்டிக்கு சிகிச்சை அளிப்பதாகவும் 6 மாதத்தில் குணமாகிவிடும் எனவும் தெரிவித்து உள்ளனர். சிகிச்சைக்காக ரூ 84 ஆயிரம் பணத்தைப் பெற்ற அந்த இரு நபர்களும் பின்னர் வரவில்லை. பணத்தை வாங்கிக் கொண்டு தலைமறைவானதை அறிந்த ராஜசேகர் மணல்மேடு போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று ராஜசேகரிடம் நூதன முறையில் பணம் மோசடி செய்து தலைமறைவாகி புதுக்கோட்டை பகுதியில் சுற்றித்திரிந்த ஆந்திர மாநிலம் சத்திய சாயி மாவட்டம் இந்துபூர், லே பாக்ஸ் பகுதியைச் சேர்ந்த சிவப்பா மகன் மஞ்சுநாதன்.42, சன்னப்பா மகன் அன்னப்பா.44. ஆகிய இருவரையும் மணல்மேடு போலீசார் கைது செய்து ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
06-Aug-2024