உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / சிறுமியை கடத்திய வாலிபருக்கு போக்சோ

சிறுமியை கடத்திய வாலிபருக்கு போக்சோ

மயிலாடுதுறை:சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.கடலுார் மாவட்டம், நெய்வேலி அடுத்த கீழ்பாதி கிராமத்தை சேர்ந்தவர் சேனாதிபதி,20; இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சேனாதிபதி அதேபகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியுடன் பழகினார்.அதனை அறிந்த சிறுமியை அவரது பெற்றோர், மயிலாடுதுறையில் உள்ள தங்களது உறவினர் வீட்டில் விட்டு சென்றனர். இந்நிலையில், கடந்த 29ம் தேதி சிறுமி மாயமானார்.இதுகுறித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில் சிறுமியை, சேனாதிபதி கடத்தி சென்று நெய்வேலியில் வைத்திருப்பது தெரிய வந்தது.அதன்பேரில் போலீசார், ஏற்கனவே பதிவு செய்த வழக்கை, போக்சோ பிரிவில் மாற்றி, சேனாதிபதியை நேற்று முன்தினம் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை