உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / கோவிலில் மாஜி கவுன்சிலர் எரிப்பு பேராசிரியரிடம் போலீஸ் விசாரணை

கோவிலில் மாஜி கவுன்சிலர் எரிப்பு பேராசிரியரிடம் போலீஸ் விசாரணை

மயிலாடுதுறை : கோவிலில் சாமி தரிசனம் செய்த முன்னாள் கவுன்சிலரை எரித்த சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் கோவிலில் சாமி தரிசனம் செய்த முன்னாள் பேரூராட்சி கவுன்சிலரான தம்பு (எ) அருண்குமாரை மர்ம நபர்எரித்து கொல்ல முயன்றசம்பவம் தொடர்பாக பொறையார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.அதில் கிடைத்த தகவலின்பேரில் தரங்கம்பாடியை சேர்ந்த நாகை கல்லுாரியில் பணியாற்றி வரும் பேராசிரியர் ஒருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.முதற்கட்ட விசாரணையில், தம்பு வாடகை பாத்திர கடை மற்றும் ஜோதிட நிலையம் நடத்தி வரும் இடத்தை காலி செய்யாததால் ஏற்பட்ட முன்விரோதத்தில் இச்சம்பவம் நடந்திருக்கலாம் என தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி