உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / மயிலாடுதுறை அருகே கடல் அட்டையை பறிமுதல்- கடத்தலில் ஈடுபட்டவர் கைது.

மயிலாடுதுறை அருகே கடல் அட்டையை பறிமுதல்- கடத்தலில் ஈடுபட்டவர் கைது.

மயிலாடுதுறை அருகே கடத்தி வரப்பட்ட கடல் அட்டையை பறிமுதல் செய்த போலீஸ் மற்றும் வனத்துறையினர் கடத்தல் ஈடுபட்ட வரை கைது செய்துள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா நண்டலார் சோதனை சாவடியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக நாகப்பட்டினம் நம்பியார் நகர் துரைராஜ் மகன் மழலைமாறன்.38. என்பவர் தரங்கம்பாடி கடல் பகுதியில் பிடிக்கப்பட்ட ரூ 2 லட்சம் மதிப்பிலான 40 கிலோ கடல் அட்டையை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் மழலை மாறனை கைது செய்து அவரிடம் இருந்த கடல் அட்டையை பறிமுதல் செய்த சீர்காழி வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து சீர்காழி வனத்துறையினர் மழலை மாறனை கைது செய்து அவரிடம் இருந்த கடல் அட்டையை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை