மேலும் செய்திகள்
ரேஷன் கடை கூரை இடிந்து ஊழியர் படுகாயம்
23-Sep-2025
நீர் வளத்துறை தலைமை பொறியாளர் மயிலாடுதுறை காவிரியில் ஆய்வு
22-Sep-2025 | 1
மயிலாடுதுறை:அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.மயிலாடுதுறை மாவட்டம் செம்மபனார்கோவில் ஒன்றியத்தை சேர்ந்த பிள்ளை பெருமாள் நல்லூர் ஊராட்சியில் குடிநீர், சாலை, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதி மற்றும் ஊராட்சி குளங்களை ஏலம் விடக் கோரி அப்பகுதி மக்கள் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை கண்டித்து கிராம மக்கள் நேற்று ஊராட்சி அலுவலகம் முன் காத்திருப்ப போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து வந்த தரங்கம்பாடி தாசில்தார் மகேஷ், செம்பனார்கோவில் பி.டி.ஓ.. மஞ்சுளா மற்றும் பொறையார் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம், கோரிக்கை குறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனையேற்று கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
23-Sep-2025
22-Sep-2025 | 1