உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / ஆட்டோ, வேன் திருடிய இருவர் கைது

ஆட்டோ, வேன் திருடிய இருவர் கைது

மயிலாடுதுறை:சீர்காழி அருகே லோடு ஆட்டோ மற்றும் மினி வேனை திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த சேந்தங்குடியில் கடந்த 9ம் தேதி கோழிக்கறி கடை முன் நிறுத்தி வைத்திருந்த லோடு ஆட்டோ மற்றும் மினி வேன் திருடு போனது.புகாரின் பேரில் சீர்காழி போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்தனர்.அதில் கிடைத்த தகவலின் பேரில் மணல்மேடு சூர்யா,24; சத்தியம்,23; ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் திருடி வைத்திருந்த ஆட்டோ மற்றும் மினிவேனை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை