உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / 8ம் வகுப்பு மாணவி கர்ப்பம்: ஆசிரியருக்கு போக்சோ

8ம் வகுப்பு மாணவி கர்ப்பம்: ஆசிரியருக்கு போக்சோ

மயிலாடுதுறை: போக்சோ வழக்கில் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை, சித்தர்காடு மறையூர் சாலையைச் சேர்ந்தவர் சாம்சன் பிரபாகரன், 54; மயிலாடுதுறை அரசு உதவி பெறும் பள்ளி உடற்கல்வி ஆசிரியர். அந்த பள்ளியில் கடந்த கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு படித்த, 14 வயது மாற்றுத்திறனாளி மாணவி மேல்படிப்பை தொடராமல் வீட்டில் இருந்து வருகிறார். அந்த மாணவிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், மாணவி ஐந்து மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். மயிலாடுதுறை மகளிர் போலீசார் மாணவியிடம் விசாரித்ததில், கர்ப்பத்திற்கு சாம்சன் பிரபாகரன் காரணம் என தெரியவந்தது. போலீசார், போக்சோ வில் சாம்சன் பிரபாகரனை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை